TNPSC Thervupettagam

பொது பட்ஜெட்

March 21 , 2018 2314 days 745 0
  • 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மக்களவையில் எந்தவிதமான விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது.
  • நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்து முடக்கி வந்த நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் பட்ஜெட் எவ்வித விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
  • நாடாளுமன்ற அலுவலில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்முறைக் கருவியே கில்லட்டின் (Guillotine) ஆகும்.
  • பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபின் நாடாளுமன்றம் அடுத்த மூன்று வாரங்களுக்கு இடைக்கால ஓய்வு (Recess) நிலையில் இருக்கும்.
  • இந்த இடைவெளி காலத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவானது (House Standing Committees) பல்வேறு அமைச்சகங்களினுடைய மானியங்களுக்கான கோரிக்கையை (Demand of Grants) ஆராய்ந்து அதன் மீது அறிக்கையைத் (Report) தயார் செய்யும்.
  • 3 வாரத்திற்குப் பின் நாடாளுமன்றம் மீண்டும் கூடியவுடன் (Reassemble) நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழுவானது (BAC - Business Advisory council) அமைச்சகங்களினுடைய மானியங்களுக்கான கோரிக்கை மீது சபை உறுப்பினர்கள் விவாதம் மேற்கொள்ள கால அட்டவணையைத் தயாரிக்கும்.
  • அளிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து அமைச்சகங்களினுடைய செலவுக் கோரிக்கைகள் (Expenditure demand) அனைத்தையும் விவாதிக்க இயலாது.
  • எனவே நாடாளுமன்ற அலுவல் ஆலோசனைக் குழுவானது  சில முக்கிய அமைச்சகங்களுடைய செலவு கோரிக்கைகளை (expenditure demands) மட்டுமே அவையின் விவாதத்திற்குத் தேர்ந்தெடுக்கும்.
  • மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய வேளாண் அமைச்சகம், மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றினுடைய மானியங்களுக்கான கோரிக்கை விவாதத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும்.
  • பின்னர் இந்த அமைச்சகங்களுடைய செயல்பாடு மற்றும் கொள்கைகளை அவை உறுப்பினர்கள் விவாதிப்பர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சகங்களின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் முடிந்த பின் அவை சபாநாயகர் “கில்லட்டின்“ நடைமுறையைப் பயன்படுத்துவார்.
  • இந்நிகழ்வானது பொதுவாக பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினங்களின் கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும்.
  • கில்லட்டின் பயன்பாடு மேற்கொள்ளப்பட்ட பின், விவாதம் மேற்கொள்ளப்பட்ட மானியக் கோரிக்கைகளோடு சேர்த்து காலம் போதாமையால் விவாதிக்கப்படாது உள்ள பிற  அனைத்து மானியக் கோரிக்கைகளும் (outstanding demands) விவாதிக்கப்பட்டதாக கருதப்பட்டு ஒன்றாக குரல் வாக்கெடுப்பிற்கு (Voice Vote) முன்னெடுத்துச் செல்லப்படும்.
  • உரிய காலத்தில் நிதி மசோதாக்களை நிறைவேற்றுவதை உறுதி செய்வதே  இத்தகு நடைமுறையை மேற்கொள்வதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்