அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப் படும் பெரும் சேதங்களுக்கு வன்முறையாளர்கள் பொறுப்பேற்கச் செய்யும் ஒரு மசோதாவை உத்தரகாண்ட் அரசு தாக்கல் செய்ய உள்ளது.
இதற்கு உத்தரகாண்ட் மாநிலப் பொது மற்றும் தனியார் சொத்து சேத மீட்பு மசோதா என்று பெயரிடப் பட்டுள்ளது.
கலவரம் மற்றும் பிற இடையூறுகளை ஏற்படுத்திய நபர்கள் இந்த மசோதாவின் கீழ் அதற்கான இழப்பீடுகளை வழங்க வேண்டும்.
உத்தரப் பிரதேச மாநில அரசு ஆனது 2020 ஆம் ஆண்டில் இதே போன்ற மசோதாவை நிறைவேற்றியது.
இதைத் தொடர்ந்து ஹரியானா மாநில அரசும் அத்தகைய சட்டத்தை இயற்றியுள்ள நிலையில் அத்தகையச் சட்டத்தை இயற்றிய மூன்றாவது மாநிலமாக உத்தரகாண்ட் விளங்கும்.