TNPSC Thervupettagam

பொது விமானப் போக்குவரத்திற்கான சர்வதேசப் பருவநிலை நடவடிக்கை

May 5 , 2023 572 days 251 0
  • சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான கார்பன் ஈடாக்கம் மற்றும் குறைப்புத் திட்டம் (CORSIA) மற்றும் நீண்ட கால உயர் இலட்சிய இலக்குகள் (LTAG) ஆகியவற்றில் 2027 ஆம் ஆண்டு முதல் இந்தியா இணைய உள்ளது.
  • இது சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) முன்னெடுப்பாகும்.
  • சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பானது அதன் அதிக கவன வழங்கீட்டுப் பிரிவுகளில் ஒன்றாக, சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்துகளில் இருந்து வெளியாகும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்குப் பணிக்கப் பட்டுள்ளது.
  • சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் சில இலக்குகள், 2050 ஆம் ஆண்டிற்குள் இரண்டு சதவீத வருடாந்திர எரிபொருள் செயல்திறன் மேம்பாடு, கார்பன் நடுநிலைத் தன்மை மேம்பாடு மற்றும் 2050 ஆண்டிற்குள் நிகர சுழிய உமிழ்வு நிலையை அடைதல் ஆகியனவாகும்.
  • சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பானது இவற்றை CORSIA மற்றும் LTAG ஆகியவற்றின் கீழ் இணைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்