TNPSC Thervupettagam

பொது விவகாரங்கள் குறியீடு - 2018 (Public Affairs Index - PAI)

July 25 , 2018 2190 days 668 0
  • பொது விவகாரங்கள் குறியீடு 2018-ன் படி, 2016-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கேரளா சிறந்த ஆட்சிமுறையைக் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • சிறந்த ஆட்சி முறையை வழங்கும் முதல் ஐந்து மாநிலங்களில் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகியவை முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
  • மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியன PAI-ல் பின்தங்கிய இடங்களில் உள்ளன. இம்மாநிலங்களில் உள்ள அதிகபட்ச சமூக மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை இது குறித்துக் காட்டுகிறது.
  • சிறிய மாநிலங்களிடையே (2 கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட) ஹிமாச்சலப் பிரதேசம் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து கோவா, மிசோரம், சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகியன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • சிறிய மாநிலங்களிடையே நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகியன இக்குறியீட்டில் மிகவும் பின்தங்கி உள்ளன.
  • பொது விவகாரங்கள் மையம்  இந்த வருடம் இக்குறியீட்டில் ‘Children of India’ என்ற புதிய அத்தியாயத்தை சேர்த்துள்ளது. இது ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவிற்கு குழந்தைகளுக்கு ஏதுவான சூழ்நிலையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன என்பதின் தகவல்களை தரும்.
  • கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள் குழந்தைகளுக்கு ஏதுவான வாழ்நிலையை வழங்குவதில் இக்குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.
  • இக்குறியீடு 2016-லிருந்து பெங்களூருவின் பொது விவகாரங்கள் மையத்தினால் (Public Affairs Center - PAC) வெளியிடப்படுகிறது. PAC ஒரு இலாப நோக்கமற்ற, இந்தியாவின் ஆட்சிமுறையை மேம்படுத்தும் எண்ணம் கொண்ட  சிந்தனை மையம் ஆகும்.
  • இது மறைந்த புகழ்பெற்ற இந்திய பொருளாதார வல்லுநர் மற்றும் அறிஞர் சாமுவேல் பாலினால் 1994-ல் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்