நீலகிரியில் உள்ள கேனிஸ் ஆரியஸ் என்ற சில பொன்னிறமான குள்ளநரிகளில் எரித்ரிசத்தின் (அசாதாரண சிகப்பு நிறமிகள்) முதல் வெளிப்பாட்டை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
இது சிவப்பு நிற தோல் நிறமியின் அசாதாரண பிறவிக் கோளாறு ஆகும்.
பொன்னிறக் குள்ளநரியின் ஒட்டு மொத்த வாழ்விட வரம்பில் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முதல் பதிவு இதுவாகும்.
எரித்ரிசம் என்ற நிலையானது ஏராளமான சிவப்பு நிறமிகளுடன் கூடிய மெலனின் பற்றாக்குறை கொண்ட நிலையாக வகைப்படுத்தப்படுகிறது.
இது சாதாரணப் புறத்தோற்றத்துடன் ஒப்பிடும்போது ஒரு வெளிர்ந்த மற்றும் சிவப்பு தோற்றத்தை ஏற்படுத்துகிறது.