TNPSC Thervupettagam

பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகள் குறித்த விதிகள் : (CAROTAR – 2020)

September 25 , 2020 1525 days 658 0
  • சுங்கம் (வர்த்தக ஒப்பந்தங்களின் கீழ் பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகளின் விதிகள் குறித்த நிர்வாகம்) விதிகள், 2020 ஆனது (CAROTAR - 2020) 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
  • இது 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்பட்டது.
  • இது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA - Free trade agreements) கீழ் இறக்குமதிகள் குறித்த முன்னுரிமை விகிதங்களை அனுமதிப்பதற்காகஉற்பத்தியாகும் நாடுகளின் விதிகளின்அமலாக்கத்திற்கான வழிகாட்டுதல்களை நிர்ணயிக்கின்றது.
  • இந்தப் புதிய விதிகள், FTA-ன் கீழ் வரிச் சலுகைகளின் தவறான பயன்பாட்டிற்கான எந்தவொரு முயற்சிகளையும் ஆய்வு செய்யும் சுங்கங்களின் திறனை வலுப்படுத்த இருக்கின்றது.

CAROTAR விதிகள்

  • தற்பொழுது இறக்குமதியாளர் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகளின் தரநிலைமை பூர்த்தி செய்யப் பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு முன்பு அதற்கான முறையான அனுமதியைப் பெற வேண்டும்.
  • இறக்குமதியாளர் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்சத் தகவல்கள் குறித்த ஒரு பட்டியலானது பொது வழிகாட்டுதலுடன் விதிகளில் கூறப்பட்டுள்ளது.
  • இறக்குமதியாளர் தற்பொழுது உற்பத்தியாகும் நாடுகள் சான்றிதழில் உள்ளவாறு நுழைவுக் கட்டணத்தில் பொருட்கள் உற்பத்தியாகும் நாடுகள் குறித்த தரவைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்