TNPSC Thervupettagam

பொருளாதாரச் சுதந்திரக் குறியீடு

May 1 , 2023 574 days 353 0
  • வாஷிங்டன் D.C. நகரத்தில் அமைந்துள்ள தி ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் என்ற ஒரு சிந்தனைக் குழுவினால் இந்தக் குறியீடானது வெளியிடப்பட்டுள்ளது.
  • சட்டத்தின் ஆட்சி, அரசாங்கத்தின் அளவு, ஒழுங்குமுறைச் செயல்திறன் மற்றும் தடை அற்றச் சந்தைகள் ஆகியவை இந்தக் குறியீட்டின் நான்கு முக்கியத் தூண்கள் ஆகும்.
  • இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர் லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • இதில் இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் 121வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் பூட்டான் சிறந்த செயல்திறனைக் கொண்டு இதில் 109வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவிற்கு கீழே உள்ள தரவரிசையினைப் பெற்ற இதர மற்ற அண்டை நாடுகள் இலங்கை (131), ஆப்கானிஸ்தான் (146), பாகிஸ்தான் (152), சீனா (154), நேபாளம் (157) ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்