TNPSC Thervupettagam

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

October 15 , 2019 1749 days 761 0
  • ஆல்பிரட் நோபலின் நினைவாக 2019 ஆம் ஆண்டின் பொருளாதார அறிவியலுக்கான  ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசானது அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது.
  • பொருளாதார அறிவியலில் நோபல் நினைவு பரிசானது அலுவல்பூர்வமாக ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு என்று அறியப் படுகின்றது.
  • "உலகளவில் வறுமையை ஒழிப்பதற்காக அவர்கள் மேற்கொண்ட சோதனை அணுகுமுறைக்காக" அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • டப்லோ என்பவர் பானர்ஜியைத் திருமணம் செய்து கொண்டார். மேலும் 2011 ஆம் ஆண்டில் “மிக மோசமான பொருளாதாரம்: வறுமை குறித்து மீண்டும் சிந்தித்தல் மற்றும் அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிகள்” என்ற மிகப் புகழ்பெற்ற புத்தகம் ஒன்றையும் டப்லோ எழுதியுள்ளார்.
  • இத்தம்பதியினர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். மைக்கேல் கிரெமர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார்.
  • 2009 ஆம் ஆண்டில் எலினோர் ஆஸ்ட்ரோமிற்குப் பிறகு, பொருளாதாரத்தில் நோபல் பரிசை வென்ற இரண்டாவது பெண் டப்லோ ஆவார்.
  • இந்தப் பரிசு பெற்றவர்களால் பயன்படுத்தப்பட்ட “புதிய, சக்திவாய்ந்த கருவி” என்பது சீரற்ற கட்டுப்பாட்டுச் சோதனைகளின் பயன்பாடு (Randomised Control Trials - RCTs) ஆகும்.
  • மருந்துகளின் விளைவுகளைச் சோதிப்பதற்காக RCTகள் பெரும்பாலும் மருத்துவத்தில் பயன்படுத்தப் பட்டன.

தமிழ்நாட்டுடன் தொடர்பு - அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம் (Abdul Latif Jameel Poverty Action Lab - J-Pal)
  • அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் டப்லோ ஆகியோர் நல்லாட்சியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசுடன் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
  • அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு ஆய்வகமானது இந்தத் தம்பதியினரால் தமிழ்நாட்டில் நிறுவப்பட்டது.
  • தற்போதைய அல்லது புதிய திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் அவற்றைக்   கண்காணிப்பதற்கும் ஒரு முடிவு/விளைவு அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றுவதற்கும் உள்திறனை வளர்ப்பதில் J-Pal அமைப்பானது அரசாங்கத்திற்கு உதவுகின்றது.
அபிஜித் பானர்ஜி பற்றி
  • அபிஜித் விநாயக் பானர்ஜி (பிறப்பு 1961) என்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பொருளாதார நிபுணர் ஆவார்.
  • 1981 ஆம் ஆண்டில் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரத் துறையில் அவர் பிஎஸ்சி பட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 1983 ஆம் ஆண்டில் தில்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் அவர் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
  • "தகவல் பொருளாதாரத்தில் கட்டுரைகள்" என்பது குறித்து முனைவர் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டதன் மூலம் ஹார்வர்டில் பொருளாதாரத் துறையில் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.
  • எஸ்தர் டப்லோ மற்றும் தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்கப் பொருளாதார நிபுணரான செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து இவர் 2003 ஆம் ஆண்டில் J-Pal நிறுவனத்தை நிறுவினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்