2015-16 ஆம் ஆண்டு தேசிய மனநலக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10.6% இளம் பருவத்தினர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெவ்வேறு கோளாறுகளுக்கான சிகிச்சையில் நிலவும் இடைவெளி 70% முதல் 92% வரை இருந்தது.
2023-24 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையானது, முதல் முறையாக கொள்கை பரிந்துரைகளில் இந்த சுகாதாரப் பிரச்சினை குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் தாக்கங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கிறது.
மேலும், கிராமப்புறப் பகுதிகள் (6.9%) மற்றும் நகர்ப்புறப் பெருநகரம் (மெட்ரோ) அல்லாதப் பகுதிகளுடன் (4.3%) ஒப்பிடும் போது நகர்ப்புறப் பெருநகரப் பகுதிகளில் (13.5%) மனநல பாதிப்பு அதிகமாக இருந்தது.
கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு, சுமார் 11% மாணவர்கள் பதட்ட உணர்வுடனும், 14% பேர் தீவிர உணர்ச்சிகளுடனும் மற்றும் 43% பேர் மனநிலை மாற்றங்களை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.