பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்தியப் பொருளாதாரத்தின் ஒரு செயல்திறன், இந்திய அரசாங்கக் கொள்கைகள் மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கான நிதியியல் கண்ணோட்டத்தின் சுருக்கமானத் தகவல்களை வழங்கும் ஓர் ஆவணமாகும்.
இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையானது தலைமை பொருளாதார ஆலோசகர் (CEA) தலைமையிலான பொருளாதாரங்கள் விவகாரத் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப் படுகிறது.
2025-2026 (FY26) ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆனது 6.4 சதவீதமாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், கட்டுமானத் துறையில் அதிவேக வளர்ச்சிப் பதிவானது. பெருந் தொற்றுக் காலத்திற்கு முந்தையதாக இருந்த போக்கை விட சுமார் 15 சதவீதம் என்பது வளர்ச்சியடைந்துள்ளது.
2025 ஆம் நிதியாண்டில் 6.4 சதவீதமாக இருந்த இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது பத்தாண்டு கால சராசரிக்கு அருகில் உள்ளது.
மொத்த கடன்கள் மற்றும் முன்பணங்களில் மொத்த வாராக் கடன்கள் ஆனது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கிராமப்புற தேவையில் ஏற்பட்ட மீட்சியால் இந்தியோ பொருளாதாரத்தில் மொத்தத் தேவையானது 7.3 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF) (நிலையான விலையில்) ஆனது 6.4 சதவீதம் வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வழங்கல் துறையில், உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (GVA) ஆனது 6.4 சதவீதம் வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண் துறையானது 2025 ஆம் நிதியாண்டில் 3.8 சதவீதமாக மீண்டும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் நிதியாண்டில் தொழில்துறையானது சுமார் 6.2 சதவீதம் வளர்ச்சியடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சேவைத் துறையின் வளர்ச்சியானது சுமார் 7.2 சதவீதமாக வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
2026 ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது 6.3 முதல் 6.8 சதவீதம் வரை இருக்கும் என இந்த ஆய்வறிக்கை மதிப்பிட்டு உள்ளது.
2017-18 ஆம் ஆண்டில் சுமார் 52.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் பணிநபர் வளத்தில் உள்ள சுயதொழில் செய்பவர்களின் சதவீதம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 58.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்திய நாடானது, 48 மணிநேரம் என்ற அதிகபட்ச அளவு வாராந்திர வேலை நேரத்தின் அடிப்படையில் ஜெர்மனி, வியட்நாம் மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளுக்கு இணையானதாக உள்ளது.
வாரத்திற்கு சராசரியாக 45 மணிநேர வேலை நேரத்துடன் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பள்ளி இடைநிற்றல் விகிதங்கள் ஆனது, சமீபத்திய ஆண்டுகளில் மிகப் படிப்படியாகக் குறைந்து, தொடக்கப் பள்ளிகளில் சுமார் 1.9 சதவீதமாகவும், மேல்நிலைத் தொடக்கப் பள்ளிகளில் சுமார் 5.2 சதவீதமாகவும், இடைநிலைப் பள்ளிகளில் 14.1 சதவீதமாகவும் உள்ளன.
இந்தியாவின் பள்ளிக் கல்வி அமைப்பானது, 98 லட்சம் ஆசிரியர்களுடன் 14.72 லட்சம் பள்ளிகளில் 24.8 கோடி மாணவர்களுக்கு கல்விச் சேவையை அளிக்கிறது.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் சுமார் 313 கிராம நியாயாலயங்கள் 2.99 லட்சத்திற்கும் அதிகமான வழக்குகளைத் தீர்த்து வைத்தன.
2024 ஆம் நிதியாண்டில் 5.4 சதவீதமாக இருந்த சில்லறை விற்பனை சார் பணவீக்கம் ஆனது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் 4.9 சதவீதமாகக் குறைந்தது.
இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% ஆக இருந்தது.
2017-18 (ஜூலை-ஜூன்) ஆம் ஆண்டில் 6.0 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 2023-24 (ஜூலை-ஜூன்) ஆம் ஆண்டில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜூலை - நவம்பர் ஆகிய காலக் கட்டத்தில் மூலதனச் செலவினம் ஆனது ஆண்டிற்கு 8.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் சுமார் 42 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவிற்கான நிகர FDI வரவு ஆனது 2024 ஆம் நிதியாண்டில் 26.5 பில்லியன் டாலராகக் குறைந்தது.