TNPSC Thervupettagam

பொருளாதார ஆய்வு அறிக்கை 2020

February 2 , 2020 1631 days 765 0
  • 2020 ஆம் நிதியாண்டின் பொருளாதார ஆய்வறிக்கையானது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
  • இந்த ஆய்வறிக்கையானது நாட்டின் பொருளாதாரப் போக்குகள், கடந்த 12 மாதங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் வளங்கள் குறித்து அறிய உதவுகின்றது.
  • பொருளாதார ஆய்வறிக்கை 2020இன் கருப்பொருளானது “வளங்களை உருவாக்குதல், வணிக சார்புக் கொள்கைகளை மேம்படுத்துதல், பொருளாதாரத்தில் நம்பிக்கையை வலுப்படுத்துதல்” என்பதாகும்.
  • பொருளாதார விவகாரத் துறையின் பொருளாதாரப் பிரிவானது தலைமைப் பொருளாதார ஆலோசகரான டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனின் வழிகாட்டுதலின் படி இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்துள்ளது.

முக்கியக் கூறுகள்

  • இந்த ஆய்வறிக்கையின் படி, தற்போதைய பொருளாதார வளர்ச்சி 5% ஆகும்.
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6% முதல் 6.5% வரை இருக்கும்.
  • 2020 ஆம் நிதியாண்டின் (2019-20) தொழில்துறை வளர்ச்சியானது 2.5% ஆகும்.
  • 2019 (2018-19) ஆம் நிதியாண்டின் அந்நிய செலாவணி இருப்பு 461.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
  • 2020 ஆம் நிதியாண்டின் பொருட்கள் மற்றும் சேவை வரி வசூலிப்பானது 4.1% அதிகரித்துள்ளது.

  • உலக வங்கியின் தொழில்முனைவோர் குறித்த தரவுப்படி, புதியதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை  தெரிவித்துள்ளது.
  • சேவைத் துறையில் ஏற்பட்டுள்ள புதிய நிறுவன உருவாக்கமானது உற்பத்தி, உள்கட்டமைப்பு அல்லது விவசாயத் துறைகளை விட கணிசமாக அதிகமாக உள்ளது.
  • குஜராத், மேகாலயா, புதுச்சேரி, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உற்பத்தித் துறையில் தொழில் முனைவோர் செயல்பாடானது அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.
  • இந்தியா 2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருளாதாரத்தை அடைய, உள்கட்டமைப்புத் துறையில் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவிட வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.
  • 2013-14 ஆம் ஆண்டில் 64.2 சதவீதமாக இருந்த அரசினால் சுகாதார நலத் துறைக்குச் செலவிடப்படும் தொகையானது 2016-17 ஆம் ஆண்டில் 58.7 சதவீதமாக குறைந்துள்ளது.
  • இந்த ஆய்வறிக்கையின் படி, இந்தியப் பொருளாதாரத்தில் 55% சேவைத் துறை பங்காற்றுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் 3.2 சதவீதத்திலிருந்த பணவீக்கம் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் 2.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது பொருளாதாரத்தில் தேவை பலவீனமடைவதை பிரதிபலிக்கின்றது.
  • 2011-12 ஆம் ஆண்டு முதல் 2017-18 ஆம் ஆண்டு வரை பெண்களின் வேலைவாய்ப்பு 8% அதிகரித்துள்ளது.
  • கால்நடை
    • இந்த ஆய்வறிக்கையின் படி, கிராமப்புறக் குடும்பங்களின் வருமானத்தின் இரண்டாம் நிலை ஆதாரமாக கால்நடைகள் மாறிவிட்டன.
    • கால்நடைகளின் வளர்ச்சியானது கடந்த 5 ஆண்டுகளில் 7.9% ஆக உள்ளது.
  • பசுமை இந்தியா
    • காடு மற்றும் மரங்களின் பரப்பு 80.73 மில்லியன் ஹெக்டேரை எட்டியுள்ளது என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகின்றது.
    • இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 24.56% ஆகும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டம்
    • இந்தத் திட்டமானது 2022 ஆம் ஆண்டுக்குள் 150000 சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களை (Health and Wellness Centres - HWC) அமைக்க முன்மொழியப் பட்டுள்ளது.
    • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வரை இதுவரை 28,005 HWC கள் அமைக்கப் பட்டுள்ளன.
  • வேலை உருவாக்கம்
    • 2011-12 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2017-18 ஆம் ஆண்டில் சம்பள ஊழியர்கள் அல்லது வழக்கமான ஊதிய ஊழியர்களின் வேலை உருவாக்கம் 5% அதிகரித்துள்ளது.
    • சுமார் 2.62 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
  • பசுமைப் பத்திரச் சந்தை
    • சீனாவுக்குப் பிறகு வளர்ந்து வரும் இரண்டாவது பெரிய பசுமைப் பத்திரச் சந்தையாக இந்தியா மாறியுள்ளது.
    • சுற்றுச்சூழல் குறித்த நிலையான முதலீடுகளை அதிகரிக்க 2019 ஆம் ஆண்டில் இந்தியா சர்வதேச நீடித்த சுற்றுச்சூழல் நிதியத்தின் தளத்துடன் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்