பொருளாதார ஆலோசனைக் குழு சீரமைப்பு
September 26 , 2017
2672 days
980
- நிதி ஆயோக்கின் உறுப்பினர் பிபேக் தேப்ராய் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- நிதி ஆயோக்கின் முதன்மை ஆலோசகர் மற்றும் முன்னாள் நிதித்துறை செயலாளரான ரத்தன் வட்டல் இதன் உறுப்பினர் மற்றும் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் இதில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்
- பொருளாதார அறிஞர் சுர்ஜித் பல்லா
- தேசிய பொது நிதி மற்றும் நிர்வாக கொள்கை நிறுவன இயக்குநர் ரத்தின் ராய் (National Institute for Public Finance & Policy)
- இந்திரா காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் ஆஷிமா கோயல்.
- பிரதம மந்திரிக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அரசிற்கும் பிரதமருக்கும் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஆலோசனை அளிக்கும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
Post Views:
980