பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Economic Advisory Council to the PM) இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. இது வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உள்கட்டமைப்புகளுக்கு நிதியளிக்கவும் தெளிவான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதே சமயம் சுகாதார வசதிகள், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சியில் அதிக வளங்களை முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளது.
இந்த சந்திப்புக்கு நிதி ஆயோக்கின் உறுப்பினரான பிபேக் திப்ராய் தலைமை தாங்கினார்.
இது 15வது நிதிக் குழுவின் கட்டமைப்புகளுக்கு வழிகாட்டும் விதமாக பரிந்துரைகளை அளித்துள்ளது. மேலும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளையும், கடைக்கோடி இணைப்பிற்கான சமுதாய குறியீடுகளையும் ஒருங்கிணைந்து ஒரு புதிய பொருளாதார அளவீட்டை வடிவமைக்க இக்குழு முனைகிறது.