TNPSC Thervupettagam

பொருளாதார உற்பத்தியின் பங்கில் உலக நாடுகளின் கடன்

September 27 , 2023 297 days 208 0
  • சர்வதேச நாணய நிதியம் ஆனது, பொருளாதார உற்பத்தியின் பங்கில் உலக நாடுகளின் கடன் ஆனது 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக கணிசமாகக் குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 248% ஆகவும், 2020 ஆம் ஆண்டில் 258% ஆகவும் இருந்த உலகின் மொத்தக் கடன் மற்றும் GDP விகிதம் ஆனது கடந்த ஆண்டு 238% ஆகக் குறைந்துள்ளது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் இது குறைந்துள்ள போதிலும், உலகளாவிய கடன் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019 ஆம் ஆண்டின் 238% என்ற அளவை விட அதிகமாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனாவின் கடன் சுமை 272% ஆக அதிகரித்ததுள்ளதையடுத்து, சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவியக் கடன் அதிகரிப்பிற்கு சீனா ஒரு முக்கியப் பங்களிப்பாளராக உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 284% ஆக இருந்த மொத்தக் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் ஆனது 2022 ஆம் ஆண்டில் 274% ஆகக் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்