- உலக நாடுகளில் நிலவுகின்ற பொருளாதார சுதந்திரத்தின் அளவினைக் கணக்கிடும் பொருளாதார சுதந்திரத்திற்கான குறியீட்டின் 2018 ஆம் ஆண்டிற்கான பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
- இக்குறியீட்டில் 186 பொருளாதார நாடுகளில் இந்தியா 130வது இடத்தைப் பிடித்துள்ளது.
- 6 புள்ளிகளைப் பெற்று 2017 ஆம் ஆண்டிற்கான இக்குறியீட்டில் 143வது இடத்தில் இருந்து இந்தியா தற்போது 2018 ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் 54.5 புள்ளிகளைப் பெற்று 13 இடங்கள் முன்னேறி 130வது இடத்தைப் பிடித்துள்ளது.
- பொருளாதார சுதந்திரத்திற்கான குறியீட்டில் முதல் 10 இடங்களிலுள்ள நாடுகளாவன
- ஹாங்காங்
- சிங்கப்பூர்
- நியூஸிலாந்து
- சுவிட்சர்லாந்து
- ஆஸ்திரேலியா
- அயர்லாந்து
- எஸ்தோனியா
- இங்கிலாந்து
- கனடா
- ஐக்கிய அரபு அமீரகம்
- இக்குறியீட்டில் சீனா 111 வது இடத்தில் உள்ளது. இக்குறியீட்டின் கடந்த பதிப்பில் சீனா 112வது இடத்தில் இருந்தது.
பொருளாதார சுதந்திரத்திற்கான குறியீடு
- அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சிந்தனைச் சாவடியான தி ஹெரிடேஜ் பவுண்டேஷன்” எனும் அமைப்பு பூஜ்ஜியம் முதல் 100 வரையிலான மதிப்பெண் அளவீட்டின்படி உலக நாடுகளை தரவரிசைப் படுத்துகிறது.
- 0 என்பது மிகக் குறைந்த பொருளாதார சுதந்திரத்தைக் குறிக்கும். 100 என்பது அதிகப்படியான பொருளாதார சுதந்திரத்தைக் குறிக்கும்.
- டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல், பொருளாதார அறிஞர்கள் நுண்ணறிவுப் பிரிவு (Economics Intelligence Unit), சர்வதேச நாணய மன்றம் (International Monetary Fund), உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களினுடைய புள்ளியியல் தரவுகளைப் பயன்படுத்தி பொருளாதார சுதந்திரத்திற்கான 12 காரணிகளின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
- பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் உலக நாடுகள் 5 வேறுபட்ட வகைப்பாட்டில் வகைப்படுத்தப்படும்.
- 80 முதல் 100 மதிப்பெண் கொண்டவை – சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட நாடுகள்.
- 0 முதல் 79.9 மதிப்பெண் கொண்ட நாடுகள் – சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட நாடுகள்.
- 0 – 69.9 மதிப்பெண் கொண்ட நாடுகள் - நடுத்தர நிலை சுதந்திரமான பொருளாதாரம் கொண்ட நாடுகள்
- 0 – 59.9 மதிப்பெண் கொண்ட நாடுகள் - பெரும்பாலும் சுதந்திரமற்றவை.
- 0-49.9 மதிப்பெண் கொண்ட நாடுகள் - ஒடுக்கப்பட்ட சுதந்திரமுடையவை.