TNPSC Thervupettagam

பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தின் இந்தியப் பொருளாதாரம் குறித்த கணிப்பு

December 31 , 2022 694 days 332 0
  • "உலகப் பொருளாதாரக் குழும அட்டவணை" என்பது பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிக்கையாகும்.
  • இந்த அறிக்கையானது, உலகளாவிய மற்றும் தேசிய அளவில் நிலவும் பேரியல் பொருளாதாரப் போக்குகளை மதிப்பிடுகிறது.
  • இந்த அறிக்கையானது 191 நாடுகளுக்கான 2037 ஆம் ஆண்டு வரையிலான பொருளாதாரக் கணிப்புகளை வழங்குகிறது.
  • இந்திய நாடானது, 2037 ஆம் ஆண்டில் மூன்றாவது பொருளாதார வல்லரசு நாடாகவும், 2035 ஆம் ஆண்டில் 10 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட பொருளாதார நாடாகவும் மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இதற்குப் பிறகு, அடுத்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது சராசரியாக 6.5 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகப் பொருளாதாரக் குழும அட்டவணையில், தற்போது இந்த 2022 ஆம் ஆண்டில் 5வது இடத்தில் இருக்கும் இந்தியா, 2037 ஆம் ஆண்டில் 3வது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்