மத்திய வங்கியின் பொருளாதார மூலதனக் கட்டமைப்பை (Economic Capital Framework-ECF) ஆய்வு செய்ய நிபுணர் குழுவொன்றை அமைக்க RBI (Reserve Bank of India) ஆனது அதன் மன்றக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
இந்த குழுவானது ரிசர்வ் வங்கியிடம் உள்ள கையிருப்புத் தொகையை அரசாங்கத்திற்கு வழங்குவது மற்றும் மீதத் தொகையை வைத்துக் கொள்வது ஆகியவை குறித்து முடிவு செய்யும்.
இந்த குழுவானது இந்திய அரசுக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கையிருப்பை மாற்றுவதற்கு அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் உறுப்பினர்கள் மற்றும் குறிப்பு விதிமுறைகளை அரசு மற்றும் RBI ஆகியவை கூட்டாக தீர்மானிக்கும்.
மிகையாக உள்ள 3.6 லட்சம் கோடி ரூபாயைப் பரிமாற்றம் செய்வதற்கான அரசாங்கத்தின் முக்கிய கோரிக்கைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையானது மத்திய வங்கியின் மொத்த கையிருப்பான 9.6 லட்சம் கோடி ரூபாயில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான தொகையாகும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடைய (MSME – Micro, Small and Medium Enterprise) கடனாளிகளின் நிலையான பாதிக்கப்பட்ட சொத்துக்களை 250 மில்லியன் ரூபாய் வரை மொத்த கடன் வசதிகளுடன் மறுசீரமைப்பதற்கான திட்டத்தை ஆலோசிப்பதாகவும் RBI ஒப்புக் கொண்டுள்ளது.
பின்ணணி
மேற்குறிப்பிட்ட விவகாரத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் மத்திய நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே இருந்த மாறுபட்ட கருத்துகளின் காரணமாக பொதுவெளியில் ஏற்பட்ட வெளிப்படையான சச்சரவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.