தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், வட்ட வடிவச் செங்கல் கட்டமைப்பின் ஒரு பகுதியினைப் பொற்பனைக் கோட்டையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சங்க காலத் தளம் ஆகும்.
மெருகூட்டப் பட்டப் பாத்திரங்கள், கறுப்பு மட்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு மட் பாண்டங்கள், கூரை ஓடுகள், துளையிடப்பட்டப் பாத்திரங்கள் மற்றும் தனித்துவமான வேலைப்பாடுகள் கொண்ட ரோமானிய மட்பாண்டங்களின் மூன்று துண்டுகள் போன்ற பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
ரோமானிய மட்பாண்டங்களால் செய்யப்பட்ட ஒரு சில்லு விளையாட்டு அமைப்பானது இங்கு கண்டறியப் பட்ட ஓர் அரிய மற்றும் முக்கியமான கண்டுபிடிப்பாகும்.
இங்கு ஒரு சங்க காலக் கோட்டை இருந்ததாக நம்பப் படுகிறது.
1.26 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த ஒரு மேட்டுக் குடியிருப்பு பகுதியானது, இந்தக் கோட்டைக்குள் இருந்ததாக நம்பப் படுகிறது.