வழிசெலுத்தல், போக்குவரத்து மற்றும் வரைபட பொருள்களை வழங்கும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு சர்வதேச அமைப்பான டாம் டாம் ஆனது 2019 ஆம் ஆண்டின் போக்குவரத்து நெரிசல் குறியீட்டை வெளியிட்டுள்ளது.
இந்தக் குறியீடானது போக்குவரத்து தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்காக இருப்பிடத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது. இந்த அமைப்பானது ஒன்பது ஆண்டுகளாக நகரத் தரவரிசைகளை வெளியிட்டு வருகின்றது.
அதிக ஓட்டுநர்களுடன் உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க நகரமாக பெங்களூரு நகரம் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் மும்பை (4), புனே (5), புது தில்லி (8) ஆகியவை இந்திய நகரங்களில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தக் குறியீட்டில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மணிலா, கொலம்பியாவிலிருந்து போகோடா, ரஷ்யாவிலிருந்து மாஸ்கோ, பெருவைச் சேர்ந்த லிமா, துருக்கியிலிருந்து இஸ்தான்புல் மற்றும் இந்தோனேசியாவிலிருந்து ஜகார்த்தா ஆகியவை முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.