தமிழ்நாடு சமூக நலத் துறையானது மூன்று சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான யோசனையை எழுப்பி இருக்கின்றது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டம், 2012 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை இந்த நீதிமன்றங்கள் பிரத்தியேகமாகக் கையாளும்.
முன்மொழியப்பட்ட நீதிமன்றங்கள் சென்னை, தூத்துக்குடி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்குரியவை ஆகும்.
இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைந்து விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இதற்கு முன்பு பரிந்துரைத்திருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒட்டுமொத்தமாக 2,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.