TNPSC Thervupettagam

போடோஸ் இயக்கம் மீதான தடை நீட்டிப்பு

November 26 , 2019 1701 days 532 0
  • சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம், 1967ன் கீழ் அசாமைத் தலைமை இடமாகக் கொண்டுச் செயல்படும் கிளர்ச்சிக் குழுவான NDFB (National Democratic Front of Bodoland - போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணி) மீதான தடையை மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
  • போடோலாந்தின் தேசிய ஜனநாயக முன்னணியானது வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் இந்திய எதிர்ப்பு சக்திகளுடன் கைகோர்த்ததற்காகவும் தடை செய்யப் பட்டுள்ளது.
  • போடோஸ் என்பது அசாமில் உள்ள ஒரு மிகப்பெரிய பழங்குடியினச் சமூகமாகும் (அம்மாநில மக்கள் தொகையில் 5-6%).
  • ஆயுதப் போராட்டத்தை கையில் எடுத்த, பிரிவினைவாத கோரிக்கைகளின் நீண்ட வரலாற்றை இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்