TNPSC Thervupettagam
December 10 , 2017 2543 days 926 0
  • புத்த பாரம்பரியத்தின் போதி பர்வா – பிம்ஸ்டெக் திருவிழாவினை இந்தியா நடத்தியது.
  • புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சர்வதேச மற்றும் இந்திய பௌத்த கலை மற்றும் கட்டிடக்கலை கண்காட்சி நடைபெற்றது.
  • பௌத்த மதத்தைச் சார்ந்த அறிஞர்கள் இவ்விழாவில் உரையாற்றினர். மேலும் பெளத்த நடனம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை விழாவை சிறப்பித்தன.
  • பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 20-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “போதி பர்வா திருவிழா” ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இத்திருவிழாவானது பிம்ஸ்டெக் நாடுகளின் உயரிய மற்றும் பொதுவான பாரம்பரியத்தை விளக்கும் விதமாக அமைந்தது.
பிம்ஸ்டெக் (BIMSTEC)
  • பிம்ஸ்டெக் (BIMSTEC – Bay of Bengal Initiatives for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்ற துணைப் பிராந்தியக் குழுவானது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளை உள்ளடக்கியது.
  • அந்நாடுகள் - பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை,தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்.
  • 1997 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பாங்காக்கில் பிஸ்டெக் (BIST-EC என்ற பங்களாதேஷ், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் பொருளாதாரக் கூட்டிணைவு) என்கிற புதிய துணைப் பிராந்தியக் குழு தொடங்கப்பெற்றது. பின்னர் இதில் மியான்மரும்,நேபாளமும் இணைந்து பிம்ஸ்டெக் என்று ஆயிற்று.
  • இந்த பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பிற்கு நேபாளம் தற்போது தலைமை வகிக்கிறது. இதன் செயலகம் டாக்காவில் அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்