புத்த பாரம்பரியத்தின் போதி பர்வா – பிம்ஸ்டெக் திருவிழாவினை இந்தியா நடத்தியது.
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சர்வதேச மற்றும் இந்திய பௌத்த கலை மற்றும் கட்டிடக்கலை கண்காட்சி நடைபெற்றது.
பௌத்த மதத்தைச் சார்ந்த அறிஞர்கள் இவ்விழாவில் உரையாற்றினர். மேலும் பெளத்த நடனம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை விழாவை சிறப்பித்தன.
பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 20-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக “போதி பர்வா திருவிழா” ஏற்பாடு செய்யப்பட்டது.
இத்திருவிழாவானது பிம்ஸ்டெக் நாடுகளின் உயரிய மற்றும் பொதுவான பாரம்பரியத்தை விளக்கும் விதமாக அமைந்தது.
பிம்ஸ்டெக் (BIMSTEC)
பிம்ஸ்டெக் (BIMSTEC – Bay of Bengal Initiatives for Multi-Sectoral Technical and Economic Cooperation) என்ற துணைப் பிராந்தியக் குழுவானது தெற்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் ஏழு நாடுகளை உள்ளடக்கியது.
அந்நாடுகள் - பங்களாதேஷ், இந்தியா, மியான்மர், இலங்கை,தாய்லாந்து, பூடான் மற்றும் நேபாளம்.
1997 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி பாங்காக்கில் பிஸ்டெக் (BIST-EC என்ற பங்களாதேஷ், இந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் பொருளாதாரக் கூட்டிணைவு) என்கிற புதிய துணைப் பிராந்தியக் குழு தொடங்கப்பெற்றது. பின்னர் இதில் மியான்மரும்,நேபாளமும் இணைந்து பிம்ஸ்டெக் என்று ஆயிற்று.
இந்த பிம்ஸ்டெக் (BIMSTEC) அமைப்பிற்கு நேபாளம் தற்போது தலைமை வகிக்கிறது. இதன் செயலகம் டாக்காவில் அமைந்திருக்கிறது.