TNPSC Thervupettagam

"போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பு" குறித்த பிராந்திய மாநாடு

January 17 , 2025 6 days 44 0
  • போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியமானது புது டெல்லியில் இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
  • வட இந்தியாவின் எட்டு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேசியப் பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து அதிகரித்து வரும் கவலையைச் சமாளிப்பதில் இது கவனம் செலுத்தியது.
  • 2024 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (NCB) மற்றும் காவல்துறை படைகள் ஆனது 16,914 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளன என்ற ஒரு நிலையில் இது சுதந்திரம் பெற்றதிலிருந்து கைப்பற்றப் பட்ட மிக அதிகபட்ச அளவாகும்.
  • 2004 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சுமார் 3.63 லட்சம் கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் அளவு ஏழு மடங்கு அதிகரித்து 24 லட்சம் கிலோகிராமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்