போதைப் பொருட்கள் மற்றும் மனோநிலைப்பாட்டைப் பாதிக்கும் பொருட்களின் (Psychotropic Substances) சட்டவிரோத கடத்தலைத் தடுப்பதற்காக தேசிய போதைப் பொருட்களுக்கெதிரான தடுப்புத் திட்டத்தின் (Anti-Narcotics Scheme ) செயல்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
இத்திட்டம் முதன் முறையாக 2004ஆம் ஆண்டு ஐந்தாண்டு காலத்திற்கு தொடங்கப்பட்டது.
எல்லை தாண்டிய மற்றும் மாநிலங்களுக்கிடையேயான உள்நாட்டு போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு பங்களித்து வரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி புரிவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
போதை மற்றும் மனோநிலைப்பாட்டை பாதிக்கும் பொருட்களின் தேவை மற்றும் அளிப்பு (demand and supply) ஆகிய இரண்டையும் குறைப்பது இத்திட்டத்தின் கீழ் உள்ள முக்கிய உத்தியாகும்.