போதைப் பொருள் பழக்க மறுவாழ்வு மையங்களுக்கான சில குறைந்தபட்ச தர நிலைகள்
April 3 , 2025 7 days 43 0
தமிழ்நாடு மாநில மனநல மற்றும் சுகாதார நலன் குறித்த போதைப் பொருள் ஒழிப்பு மையங்களுக்கான 2025 ஆம் ஆண்டு குறைந்த பட்சத் தர நிலைகள் விதிமுறைகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த விதிமுறைகளானது 2017 ஆம் ஆண்டின் மனநலப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இது, அவை வழங்கும் பல சேவைகளின் அடிப்படையில் அந்த மையங்களை இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது:
விரிவான போதைப் பொருள் பழக்க மறுவாழ்வு மையங்கள் (CDC) மற்றும்
போதைப் பொருள்களின் தவறான பயன்பாடு தொடர்பான பிரச்சினை உள்ள நபர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் (RC).
CDC மையங்கள் ஆனது நச்சுத் தன்மை நீக்கம் மற்றும் மறுவாழ்வு சேவையை வழங்கும் என்ற நிலையில் RC மையங்கள் முக்கியமாக நச்சு நீக்கத்திற்குப் பிறகான உளவியல் ரீதியான சேவைகளை வழங்கும்.
அனைத்து மையங்களும் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.