ஓஸ்லோவில் போதை மருந்து அச்சுறுத்தல் தொடர்பான பிரச்சனைகளை வெளிக் கொண்டு வர போதை மருந்து எதிர்ப்பு விளையாட்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தலைப்பானது ‘தூய்மையான விளையாட்டு நியாயமான விளைவுகள்’ ஆகும்.
இந்த மாநாடானது வியாபாரத்தில் நெறிமுறைகளுக்கான உலக மன்றம் (WFEB-World Forum for Ethics in Business) மற்றும் நார்வேயின் போதை மருந்து எதிர்ப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். நேர்மையான விளையாட்டுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்த மாநாட்டில் முன்மொழியப்பட உள்ளது.
போதை மருந்து எதிர்ப்பு விளையாட்டு மாநாடானது, வியாபாரத்தில் நெறிமுறைகளுக்கான உலக மன்றம் (WEFB) நடத்தும் விளையாட்டில் நெறிமுறைகள் மாநாட்டின் தொடர்ச்சியாகும்.
இதற்கு முன் 2014 மற்றும் 2016-ல் எப்ஐஎப்ஏ (FIFA - Federation International football association) தலைமையிடத்திலும், 2015-ல் பெர்லின் ஒன்றியத்தில் உள்ள ஜெர்மானிய சாக்கர் கிளப்பிலும் இம்மாநாடு நடைபெற்றது.