கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரும் வாடிகன் சிட்டி அரசின் இறையாண்மை கொண்ட தலைவர் போப் பிரான்சிஸ் சமீபத்தில் காலமானார்.
அர்ஜென்டினாவில் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ என்ற தனது பெயரில் பிறந்த பிரான்சிஸ், 2013 ஆம் ஆண்டில் முதல் கிருத்தவப் போப்பாகவும், இலத்தீன் அமெரிக்காவினைச் சேர்ந்த முதல் போப்பாகவும் பதவியேற்று இவர் மிகவும் புதிய வரலாற்றைப் படைத்தார்.
சுமார் 1,200 ஆண்டுகளுக்கும் மேலான நடைமுறையில் ஒரு ஐரோப்பியரல்லாத போப் ஆண்டவராக திகழ்ந்த முதல் முதல் நபர் இவரே ஆவார்.
அவர் 1998 ஆம் ஆண்டில் பியூனஸ் அயர்ஸின் பேராயரானார் என்பதோடு 2001 ஆம் ஆண்டில் போப் இரண்டாம் ஜான் பால் அவர்களால் அதன் திருச்சபை அதிகாரியாக (கார்டினலாக) நியமிக்கப்பட்டார்.
போப் பத்தாம் பயஸுக்குப் பிறகு போப்பாண்டவர் குடியிருப்புகளுக்கு வெளியே வாழ்ந்த முதல் போப் இவர்தான்.
2019 ஆம் ஆண்டில் அரேபியத் தீபகற்பத்தில் திருப்பலி நிறைவேற்றிய முதல் போப் பிரான்சிஸ் ஆவார்.
புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பை "மக்களின் கடமை" என்று அவர் கூறி, குடியேற்ற எதிர்ப்பு அரசியலை விமர்சித்தார்.
2022 ஆம் ஆண்டில், கனடிய பழங்குடியின மக்களின் "கலாச்சார மற்றும் பெரும் இனப் படுகொலையில்" திருச்சபையின் பங்கிற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
உலகளாவிய அளவில் மரண தண்டனையை ஒழிக்கும் நடவடிக்கையை ஆதரிப்பதாக பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபைக்கு உறுதியளித்தார்.
வாடிகானில் முன்னர் ஆண்கள் மட்டுமே வகித்த பல்வேறு பதவிகளுக்கு பெண்களை அவர் நியமித்தார்.
பதினெட்டாம் லியோவிற்குப் பிறகு, வாடிகனுக்கு வெளியே உடலடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவரே ஆவார்.