TNPSC Thervupettagam

போர்த்திறன் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் (Strategic Trade Authorization - 1 - STA - I) - இந்தியா

August 1 , 2018 2312 days 680 0
  • அமெரிக்கா இந்தியாவினை போர்த்திறன் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் (STA-1) பெற்ற நாடாக அறிவித்துள்ளது.
  • இதன் மூலம் மேம்பட்ட மற்றும் அதிநவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்க முடியும்.
  • இத்தகைய அந்தஸ்து இந்தியாவினை அமெரிக்காவின் நேச மற்றும் பங்குதாரர் நாடுகளான NATO (North Atlantic Treaty Organisation) - வுடன் சமநிலைக்குக் கொண்டு வரும்.
  • தற்போது STA-I பட்டியலில் 36 நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் இடம் பெற்ற முதல் தெற்காசிய நாடு இந்தியா ஆகும். STA-I நாடுகளாக அந்தஸ்து பெற்ற மற்ற ஆசிய நாடுகள் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகியனவாகும்.
  • STA-1 அந்தஸ்து, அங்கீகரிக்கப்படாத (அ) அனுமதிக்கப்படாத குறைந்த பாதிப்பு அளிக்கக்கூடிய இலக்குகளுக்கான வர்த்தக கட்டுப்பாடு பட்டியலில் உள்ள குறிப்பிட்ட பொருட்களை ஏற்றுமதி, மறு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டிற்குள் வர்த்தகம் செய்து கொள்ளவும் அங்கீகாரம் அளிக்கிறது.
  • தனிப்பட்ட உரிமங்கள் இன்றி இந்தியாவிற்கு அனுப்பப்படும் ஏற்றுமதி நிர்வாக விதிமுறைகளுக்கு உள்ளாகும் தொழில்நுட்ப ஏற்றுமதிகளின் நோக்கத்தினை இந்த STA-1 அந்தஸ்து விரிவடையச் செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்