TNPSC Thervupettagam

போர்ப்ஸ் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள்

May 15 , 2018 2288 days 741 0
  • 2018-ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் (2018 World's Most Powerful People list) உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களுள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) முதல் இடத்தில் உள்ளார்.
  • 75 நபர்களுக்கான இந்த உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியத் தொழிலதிபர் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி ஆவார்.

  • தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நபராக இப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த இரஷ்ய அதிபர் விளாதிமர் புதின் இந்த ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
  • இப்பட்டியலில் மிகவும் சக்தி வாய்ந்த நபராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 3-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே 14-வது இடத்தில் உள்ளார்.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்