போர் விமானத்திற்கு நடுவானில் மறுஎரிபொருள் நிரப்புதல்
September 7 , 2018 2271 days 696 0
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் என்ற இலகுரக போர் விமானத்திற்கு நடுவானில் மறுஎரிபொருள் நிரப்பும் பணியானது முதன்முதலாக இந்திய விமானப் படையால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இரஷ்யாவால் கட்டமைக்கப்பட்ட IL – 78 MKI எரிபொருள் நிரப்பு விமானமானது தேஜாஸ் MK-I விமானத்திற்கு எரிபொருளைக் கடத்தியது.
இந்தச் சோதனையானது dry linkup முறையைக் கொண்டு நடத்தப்பட்டதாகும். dry linkup என்பது இந்திய விமானப் படையின் IL-78 எரிபொருள் நிரப்பு விமானம் மற்றும் தேஜாஸ் போர் விமானங்களுக்கிடையே உண்மையில் எவ்வித எரிபொருளும் கடத்தாமல் சோதித்துப் பார்க்கப் பட்டது.