TNPSC Thervupettagam

போற்றப்படாத சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள்

August 17 , 2023 340 days 239 0
  • குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் மாதாங்கினி ஹஸ்ரா, கனகலதா பருவா ஆகியோர்  நம் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் அழிக்க முடியாதப் பங்களிப்பினை ஆற்றிய சில குறிப்பிடத் தக்க வீராங்கனைகளை நினைவு கூர்ந்தார்.
  • 1930 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கம் மற்றும் காந்தியின் தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக யாத்திரையில் பங்கேற்றதற்காக ஹஸ்ரா கைது செய்யப்பட்டார்.
  • ஹஸ்ரா, 1942 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள தம்லுக் எனுமிடத்தில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் சமயம் ஓர் அணிவகுப்பை வழி நடத்திய போது, ஆங்கிலேய வீரர்களின் தோட்டாக்களுக்குப் பலியான போது அவருக்கு வயது 73 ஆகும்.
  • 1977 ஆம் ஆண்டில், கொல்கத்தா நகர மைதானத்தில் ஒரு பெண் புரட்சியாளருக்காக ஏற்படுத்தப் பட்ட முதல் சிலை மாதாங்கினி ஹஸ்ராவின் சிலையாகும்.
  • கனகலதா பருவா, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற இளம் தியாகிகளில் ஒருவர் ஆவார்.
  • 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று, கோஹ்பூர் காவல் நிலையத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காக வேண்டி மேற்கொள்ளப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் மிருத்யு பாஹினி அணி வகுப்பை 17 வயதான பருவா தலைமையேற்று வழி நடத்திச் சென்றார்.
  • 2020 ஆம் ஆண்டில், விரைவு ரோந்துக் கப்பல் (FPV) எனப் படும் கடலோரக் காவல் படைக்கு இவரின் நினைவாக ICGS கனகலதா பருவா என்று பெயரிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்