இந்தியப் பிரதமர் அவர்கள், போலந்து நாட்டிற்கு விஜயம் செய்தார் என்ற நிலையில் கடந்த 45 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் அவர்கள் ஒருவர் அந்த நாட்டிற்கு மேற் கொண்ட முதல் பயணம் ஆகும்.
மொரார்ஜி தேசாய் அவர்கள், 1979 ஆம் ஆண்டில் போலந்து நாட்டிற்குப் பயணம் மேற் கொண்ட கடைசி பிரதமர் ஆவார்.
2024 ஆம் ஆண்டு ஆனது, இந்தியா - போலந்து அரசு முறை உறவுகளின் 70 ஆண்டு நிறைவுகளைக் குறிக்கிறது.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பிராந்தியத்தில் போலந்து நாடானது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்குதாரராக உள்ளது.
போலந்து நாட்டில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகள் ஆனது, சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் போலந்து நாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் ஆனது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
பிரதமர் அவர்கள் போலந்து நாட்டில் இருந்து உக்ரைனுக்கு "Rail Force One" இரயிலில் 10 மணி நேர பயணத்தினை மேற்கொண்டார்.
1991 ஆம் ஆண்டில் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு அந்நாட்டிற்குப் பயணம் மேற் கொண்ட முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த இரயிலில், இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் போலந்தில் இருந்து கீவ் வரை பயணித்தார்.