ஜெர்மன் ஆல்பெர்டு வெஜ்னர் மையத்தைச் சேர்ந்த போலார்ஸ்டெர்ன் கப்பலானது பனியில் உறைந்து கிடக்கும் ஆர்க்டிக் பிரதேசத்தின் வழியாகப் பயணித்து, அங்கு 389 நாட்களைக் கழித்த பிறகு ஜெர்மனியின் பிரிமர்ஹேவன் (Bremerhaven) துறைமுகத்திற்குத் திரும்பியுள்ளது.
இது அப்பகுதியில் புவி வெப்பமடைதலின் தாக்கம் குறித்துத் தேவையான தகவலைச் சேகரிக்க ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கின்றது.
வட துருவத்திற்குச் செலுத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய திட்டம் இதுவாகும். இது உருகி வரும் ஆர்டிக் கடல் குறித்து ஒரு சில வலுவான ஆதாரத்தைச் சேகரித்துக் கொண்டு வருவதையும் அடுத்த சில பத்தாண்டுகளில் நிகழவிருக்கும் பனியற்ற கோடைக் காலங்கள் குறித்த எச்சரிக்கைகளையும் அளிப்பதையும் செய்து வருகின்றது.
போலார்ஸ்டெர்ன் திட்டம்
போலார்ஸ்டெர்ன் திட்டமானது உலகத்தில் மற்றும் ஒரு பிராந்தியத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த தகவலை அறிந்து கொள்வதற்கு உதவுவதற்காக வேண்டி கடந்த ஓராண்டு காலமாக கடற்பனி, கடல், வளிமண்டலம் மற்றும் சூழலியல் குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று, நார்வேயின் ட்ரோம்சோவில் இருந்து இந்தக் கப்பல் புறப்பட்டது.
இதில் உள்ள குழுவினர் அப்பகுதியில் பல்வேறு மாதங்களாக நிலவி வந்த இருளையும், மிகக் குறைந்த வெப்பநிலையாக -39.5oசெல்ஷியஸ் வெப்ப நிலையையும் கண்டுள்ளனர்.
‘இந்தத் திட்டமானது ப்ளாங்டன் தாவரம் மற்றும் பாக்டீரியா குறித்து ஆய்வு செய்வதற்காகவும் கடல்சார் சூழலியல் எவ்வாறு கடுமையான சுற்றுச்சூழலில் செயல்படுகின்றது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவும் வேண்டி துருவ இரவின் போது பனிக்கு அடிப்பகுதியில் உள்ள நீர் மாதிரிகளைச் சேகரித்துள்ளது.