போலியான செய்திகளை வெளியிடும் சமூக வலைதள கணக்குகளை முடக்கவும், பத்திரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளித்து எகிப்து நாட்டு பாராளுமன்றம் சட்டமியற்றியுள்ளது.
அதிபர் அப்தல் ஃபட்டா அல்-ஸிஸி ஆல் நியமிக்கப்பட்ட அதிகாரியை தலைவராகக் கொண்ட, ஊடகங்களை நிர்வகிக்கும் உயர்மன்றமானது இச்சட்டத்தை மேற்பார்வையிட்டு விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்.
இம்மசோதா உயர்மன்றத்திடமிருந்து உரிமம் பெறாமல் வலைதளங்கள் தொடங்குவதை தடை செய்கிறது. மேலும் எந்தவொரு வலைதளங்களையும் தற்காலிக தடை அல்லது முடக்கம் செய்ய அனுமதியளிக்கிறது.
சமீபத்தில் பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2017ல் 180 நாடுகளில் எகிப்து 161வது இடத்தைப் பிடித்துள்ளது.