TNPSC Thervupettagam
March 4 , 2022 873 days 533 0
  • இயற்பியல் பேராசிரியர், தீபக் தார் போல்ட்ஸ்மேன் பதக்கத்தினைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • புள்ளியியல் இயற்பியல் (statistical physics) துறையில் ஆற்றப்படும் பங்களிப்பிற்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சர்வதேச தூய மற்றும் பயன்பாட்டு இயற்பியல் ஒன்றியத்தின் புள்ளியியல் – இயற்பியல் ஆணையத்தினால் இந்தப் பதக்கமானது வழங்கப் படுகிறது.
  • இதற்கான விழாவானது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஸ்டாட்பிஸ்28 (StatPhys28) மாநாட்டின் போது நடத்தப்படும்.  
  • பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் ஜான்.J. ஹோஃபீல்டு என்பவரும் இவருடன் சேர்ந்து இந்தப் பதக்கத்தினைப் பெற உள்ளார்.
  • பேராசிரியர் தார் தற்போது புனேவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்