மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவியலாளர்கள், போல்ட்ஸ்-1 எனப்படுகின்ற ஒரு மிக சக்தி வாய்ந்த, பொதுப் பயன்பாட்டு செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
இது உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து மேம்பாட்டினை மிக கணிசமாக துரிதப் படுத்தும்.
போல்ட்ஸ்-1 ஆனது AlphaFold3 என்ற மாதிரியின் அதிநவீனச் செயல்திறனுக்கு நிகரான நிலையைக் கொண்டுள்ளது.
AlphaFold3 என்பது புரதக் கட்டமைப்புகளைக் கணிப்பதில், கூகுளின் DeepMind என்ற நிறுவனத்தின் ஒரு தனியுரிம மாதிரியாகும்.