TNPSC Thervupettagam

போஷான் அபியான்

April 9 , 2020 1565 days 640 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது போஷான் அபியான் (முழுமையான ஊட்டச்சத்திற்கான பிரதம அமைச்சரின் விரிவான திட்டம்) திட்டத்தின் முழுமையானச் செயல்படுத்துதலுக்காக முதலாவது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இது 2018 ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று சர்வதேசப் பெண்கள் தினக் கொண்டாட்டத்தின் போது இந்தியப் பிரதமரால் இராஜஸ்தானின் ஜூன்ஜினு என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
  • இது இதற்கு முன்பு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியிலிருந்து தேசிய ஊட்டச்சத்துத் திட்டம் (NNM) என்று அழைக்கப்படுகின்றது,
  • இந்தத் திட்டமானது ஒருங்கிணைத்தல் மற்றும் முடிவுகள் குறித்த அணுகுமுறை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு வாழ்க்கைச் சுழற்சி குறித்த ஒரு அணுகுமுறையின் மூலம் படிப்படியாக நாட்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டத்தில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • இது நிதி ஆயோக்கின் ஆய்வு அறிக்கையான “இந்தியாவில் ஊட்டச்சத்து முறையை மாற்றுதல் : போஷான் அபியான்” என்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • இது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்