TNPSC Thervupettagam

போஷான் டிராக்கர் செயலியின் 2024 ஜூன் மாதத் தரவு

July 28 , 2024 121 days 206 0
  • இந்திய நாட்டில் 0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 17% எடை குறைந்த நபர்களாகவும், சுமார் 36% பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 6% பேர் எடைக்கேற்ற வளர்ச்சி இல்லாதவர்களாகவும் உள்ளனர்.
  • 6 வயதுக்குட்பட்ட சுமார் 8.57 கோடி குழந்தைகள் குறித்தத் தரவுகள் சேகரிக்கப் பட்டன.
  • அவர்களில் சுமார் 35% பேர் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 17% பேர் மட்டுமே எடை குறைந்தவர்களாகவும், 5 வயதுக்குட்பட்ட 6% குழந்தைகள் எடைக்கேற்ற ஒரு வளர்ச்சி இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர்.
  • இதில் உத்தரப் பிரதேசம் 46.36% வளர்ச்சி குன்றிய குழந்தைகள் விகிதத்துடன் முதல் இடத்திலும், அதைத் தொடர்ந்து 46.31% விகிதத்துடன் லட்சத்தீவுகளும் இடம் பெற்று உள்ளது.
  • மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை முறையே 44.59% மற்றும் 41.61% என ஆபத்தான அளவிலான வளர்ச்சி குன்றிய குழந்தைகள் எண்ணிக்கை விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • 13.22% குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளதையடுத்து, எடைக்கேற்ற வளர்ச்சி இல்லாத குழந்தைகள் விகிதமானது லட்சத்தீவில் மிக அதிக அளவில் பதிவாகியுள்ளது.
  • இதில் பீகார் மற்றும் குஜராத் ஆகியவை முறையே 9.81% மற்றும் 9.16% வீதத்தில் அதிக எடைக்கேற்ற வளர்ச்சி இல்லாத குழந்தைகள் விகிதங்களைக் கொண்டுள்ளன.
  • இதில் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், மத்தியப் பிரதேசம் 26.21% முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து 26.41% விகிதத்துடன் தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ இடம் பெற்றுள்ளன.
  • லட்சத்தீவு இதிலும் 23.25% வீதத்தைக் கொண்டுள்ளது.
  • கோவா மாநிலத்தில் குறைவாக 5.84% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், 0.85% குழந்தைகள் எடைக்கேற்ற வளர்ச்சி இல்லாதவர்களாகவும், 2.18% குழந்தைகள் எடை குறைந்தவர்களாகவும் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்