போஷான் அபியான் திட்டத்தின் (Poshan Abhiyaan) கீழ் ஊட்டச்சத்து அளவீடுகள் (nutrition parameter) அடிப்படையில், நிதி ஆயோக் அமைப்பானது இந்திய மாநிலங்களை தரவரிசைப்படுத்த உள்ளது.
போஷான் அபியான் திட்டத்தின் கீழான இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் மீதான தேசியக் குழுவின் (National Council on India's Nutrition Challenges) முதல் சந்திப்பு அண்மையில் நிதி ஆயோக் அமைப்பால் நடத்தப்பட்டது.
அமைச்சரகங்களிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் மதிப்பாய்வு கூட்டத்தின் மூலம் நாட்டின் முக்கி, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான பிரச்சனைகளை களைவதற்கு நிதி ஆயோக் அமைப்பினால் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஊட்டச்சத்து நிலையினைப் பற்றி ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இக்குழு பிரதமரிடம் தன் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
போஷான் அபியான் திட்டத்தின் கீழ் மகப்பேறுடைய பெண்களுக்கு தரமான ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.
போஷான் அபியான் திட்டமானது நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டினையும், வளர்ச்சி குன்றலையும். இளங்குழந்தைகள், பெண்கள் மற்றும் இளம் பெண் குழந்தைகளிடையே இரத்த சோகையை குறைக்கவும், பிறப்பு எடை குறைவை குறைக்கவும் இலக்கினைக் கொண்டுள்ளது.
குழந்தைகளிடத்தில் 80 சதவீத மூளை வளர்ச்சியானது அவர்களுடைய வாழ்வின் முதல் 1000 நாட்களில் ஏற்படுவதால், குழந்தைகளுடைய இந்த முக்கிய கால கட்டத்தின் மீது போஷான் அபியான் திட்டம் அதிக கவனத்தை செலுத்த உள்ளது..
0 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளிடத்தில் வளர்ச்சி குன்றல் (stunting) நிலையினை தற்போதைய4 சதவீதம் என்ற அளவிலிருந்து 2022-ல் 25 சதவீதம் என்ற அளவுக்கு குறைப்பதற்கு இத்திட்டம் இலக்கினைக் கொண்டுள்ளது.