TNPSC Thervupettagam
November 7 , 2017 2604 days 928 0
  • பிரெஞ்சு எழுத்தாளர் எரிக் விலார்டு எழுதிய “ஆர்டர்-டு-ஜோர்” (“L”’Odre du jour”)என்ற பிரஞ்சு புத்தகத்திற்கு “ப்ரீக்ஸ் காண்கோர்” (Prix Goncourt) இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது.
  • “ஆர்டர்-டு-ஜோர்” என்ற பிரஞ்சு வார்த்தை “பொருள் நிரல்” (Agenda) எனப் பொருள்படும். அடால்ப் ஹிட்லரின் எழுச்சிக்கு அன்றைய ஜெர்மனியின் தொழில்துறையும், நிதித்துறையும் எவ்வாறு ஆதரவளித்தன என்பதை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த புத்தகத்தினை இவ்வாண்டிற்கான விருதுக்கு 10 பேர் கொண்ட காண்கார் அகாடமியின் நடுவர் குழு தேர்வு செய்துள்ளது.
  • “ப்ரீ காண்கார்” விருதுக்கு தேர்வு பெறாத புத்தகங்களுக்கான ஆறுதல் பரிசாக கருதப்படும் “ப்ரீ ரெனடாட்”(Prix renaudot) விருதினை ஆலிவர் கெஸ் எழுதிய “The disappearance of josef Mengele” என்ற புத்தகம் பெற்றுள்ளது. இது யூத இனப்படுகொலைக்கு பின்னர் இரகசியமாக மறைந்து வாழ்ந்த ஜோசப் மெங்கல் எனும் நாஜி போர் குற்றவாளியைக் குறித்த புத்தகமாகும்.
  • காண்கார் அகாடமி பிரபல பிரஞ்சு எழுத்தாளரான எட்மன்ட்-டி-காண்கோர் என்பவரால் 19ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. இது பிரஞ்சு இலக்கியத்தில் புதிய திறமைகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.
  • ப்ரீ காண்கார் விருது 1903 ஆம் ஆண்டு துவங்கி எட்மண்டு சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. பிரஞ்சு இலக்கிய உலகில் இது மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.
  • எட்மண்டு சகோதரர்கள்:
  1. எட்மண்டு டி காண்கார்
  2. ஜீல்ஸ் டி காண்கார்
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்