TNPSC Thervupettagam

ப்ரூ – ரியாங் அகதிகள் பிரச்சினை

May 8 , 2020 1573 days 715 0
  • வடக்குத் திரிபுரா மாவட்டத்தின் கஞ்சன்புர் துணை மண்டலத்திற்கு ப்ரு அகதிகள் இடம் மாற்றப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மத்திய அரசு ப்ரூ அகதிகள் பிரச்சினைக்கு வேண்டி ஒரு நிரந்தரத் தீர்விற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
  • இந்த ஒப்பந்தமானது மத்திய அரசு, திரிபுரா அரசு, மிசோரம் அரசு மற்றும் ப்ரூ ரியாங் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையே கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, ப்ரூ குடிமக்களுக்கு திரிபுராவில் வசிக்க நிலம் தரப்பட இருக்கின்றது.
  • ரியாங் என்றும் அழைக்கப்படும் ப்ரூ பழங்குடியினர் திரிபுரா, அசாம், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளனர்.
  • திரிபுராவில், இவர்கள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழு ஆக அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.
  • 30,000ற்கும் மேற்பட்ட ப்ரூ பழங்குடியினர் 1997 ஆம் ஆண்டில் மிசோரத்திலிருந்துத் தப்பிச் சென்றனர்.
  • இவர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் திரிபுராவில் உள்ள பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்