TNPSC Thervupettagam

ப்ளூ டாட் அமைப்பு (Blue Dot Network)

February 27 , 2020 1641 days 644 0
  • ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து அமெரிக்காவின் தலைமையில் ப்ளூ டாட் அமைப்பானது (Blue Dot Network - BDN) 2019 ஆம் ஆண்டு  நவம்பரில் தாய்லாந்தில் முறையாக அறிவிக்கப் பட்டது.
  • "உலகளாவிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான உயர்தரமான, நம்பகமான தரங்களை" ஊக்குவிப்பதற்காக அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்ட பல பங்குதாரர்களின் முன்முயற்சியாக இது கருதப் படுகின்றது.
  • BDNக்கான திட்டமானது அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் உத்திசார் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சீனாவின் மண்டலம் மற்றும் பாதை வழித்தட முன்முயற்சியை (Belt and Road Initiative - BRI) எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியா எதிர்காலத்தில் அமெரிக்கா தலைமையிலான BDNல் இணைய இருக்கின்றது.

சீனாவின் மண்டலம் மற்றும் பாதை வழித்தட முன்முயற்சி

  • BRI என்பது ஆசியாவை நிலம் மற்றும் கடல் பாதைகள் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைப்பதற்கான ஒரு லட்சியத் திட்டமாகும்.
  • BRI ஆனது பின்வருவனவற்றைக் கொண்டிருகின்றது. அவையாவன
    • பட்டுச் சாலைப் பொருளாதார மண்டலம் - சீனாவை நிலப்பாதை வழியாக தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, மத்திய ஆசியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் கண்டங்களுக்கிடையேயான பாதையாகும்.
    • 21 ஆம் நூற்றாண்டு கடல்சார் பட்டுச் சாலை - சீனாவின் கடலோரப் பகுதிகளை தென்கிழக்கு மற்றும் தெற்காசியா, தென் பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுடன் ஐரோப்பாவிற்கு இணைக்கும் ஒரு கடல்வழிப் பாதையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்