TNPSC Thervupettagam

மகப்பேற்று இறப்பு விகிதம்

June 18 , 2018 2226 days 683 0
  • இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தால் (Registrar General of India) வெளியிடப்பட்டுள்ள மாதிரிப்  பதிவு முறைமைத் (sample registration system-SRS) தரவுகளின் படி, மகப்பேற்று இறப்பு விகிதம் (Maternal Mortality Rate-MMR) ஆனது 2011-13-ஆம் ஆண்டின் விகிதமான  167 எனும் அளவிலிருந்து 2014-16ஆம் ஆண்டு 130 ஆக குறைந்துள்ளது.
  • நாட்டினுடைய முன்னேற்றத்தை மதிப்பிட பகுப்பாய்வாளர்கள் (analysts) மற்றும் வளர்ச்சிப் பொருளாதார வல்லுநர்களால் (developmental economists) பயன்படுத்தப்படும் பரந்த அளவுருக்களின் மீதான ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே 2013-ஆம் ஆண்டிலிருந்து மகப்பேற்று இறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்த 22 சதவீத குறைவாகும்.
  • மாநிலங்களுள் மகப்பேற்று இறப்பு விகிதத்தில் குறைவினைக் கண்டுள்ள மூன்று சிறந்த  மாநிலங்கள்
    • கேரளா - 46  (61)
    • மகாராஷ்டிரா - 61 (68)
    • தமிழ்நாடு - 66 (79)
  • மகப்பேற்று இறப்பு விகிதத்தில்  மோசமான மூன்று மாநிலங்கள்
    • அஸ்ஸாம்-237 (300)
    • உத்திரப்பிரதேசம்/உத்தரகண்ட்-201 (285)
    • ராஜஸ்தான்-199 (244)

  • 1990-ஆம் ஆண்டு உலக மகப்பேற்று இறப்பு விகிதமானது 385 ஆகும். 2015-ல் இதன் விகிதம் 216 ஆகும். 25 ஆண்டுகளில் 44 சதவீதம் குறைவு நிகழ்ந்துள்ளது.
  • பெரும்பாலான உலகளாவிய மகப்பேற்று இறப்புகள்  ஆப்பிரிக்க சஹாரா துணைப் பகுதிகளில் (Sub-Saharan Africa) நிகழ்கின்றன.  அதாவது 66 சதவீத மகப்பேற்று  இறப்புகள். அதனைத் தொடர்ந்து தெற்காசியாவில் நிகழ்கின்றது. அதனளவு 22 சதவீதமாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்