TNPSC Thervupettagam

மகப்பேற்று இறப்பைக் குறைத்ததற்கு மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு விருது

July 2 , 2018 2210 days 609 0
  • பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை பிரச்சாரத்தின் கீழ் (PMSMA – Pradhan Mantri Surakshit Matrifva Abhiyan) மகப்பேற்று இறப்பைக் குறைத்ததற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகம் மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு விருது வழங்கியுள்ளது.
  • இந்தியப் பதிவாளர் ஜெனரல் (Registrar General of India) அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் 2014 முதல் 2016 வரை மத்தியப் பிரதேசத்தில் முன் எப்போதும் இல்லாத அளவாக மகப்பேற்று இறப்பு 48 ஆகக் குறைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அம்மாநிலத்திற்கு இவ்விருது வழங்கப்பட்டது.
  • மத்தியப் பிரதேசத்தில் மகப்பேற்று இறப்பு விகிதம் 2011-13-ல் 221 ஆக இருந்தது. இது தற்பொழுது 173 ஆகக் குறைந்துள்ளது.
  • இது மாநிலத்தில் கடைசி மூன்று ஆண்டுகளில் 22% மகப்பேற்று இறப்பு விகிதம் குறைந்துள்ளதைக் காட்டுகிறது.
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கருவுற்ற பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்ய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகம் PMSMA என்ற திட்டத்தைத் தொடங்கியது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்