TNPSC Thervupettagam

மகரிஷி பத்ரயான் வியாஸ் சம்மான்

August 19 , 2019 1806 days 669 0
  • சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பாலி, பிராகிருதம், செம்மொழி கன்னடம் , செம்மொழி தெலுங்கு, செம்மொழி மலையாளம், செம்மொழி ஒடியா ஆகிய மொழிகளின் அறிஞர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான மகரிஷி பத்ரயான் வியாஸ் சம்மான் விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
  • இது மேற்கண்ட மொழிகளில் அவர்களின் கணிசமான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக வருடத்திற்கொரு முறை சுதந்திரத் தினத்தன்று வழங்கப்படுகின்றது.
  • இது 2002 ஆம் ஆண்டில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட விருதாகும்.
  • இது 30 முதல் 45 வயதிற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்படும் இளம் அறிஞர்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • மேலும் இதுதவிர, சமஸ்கிருதம், பாரசீகம், அரபி, பாலி, பிராகிருதம், செம்மொழி மலையாளம், செம்மொழி ஒடியா, செம்மொழி கன்னடம் ஆகிய மொழி அறிஞர்களுக்கு கௌரவச் சான்றிதழையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
  • 1958 ஆம் ஆண்டில் சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் அரபு மொழிகளின் அறிஞர்களை கவுரவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இது பின்னர் 1996 ஆம் ஆண்டில் பாலி பிராகிருதம் மற்றும் ஆகிய மொழிகளையும் உள்ளடக்கியது.
  • இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அறிஞர்களுக்கு வழங்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்