சர்வதேசக் கால்பந்துக் கூட்டமைப்பு மன்றமானது ‘17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை – 2021’ போட்டியை இரத்து செய்துள்ளது.
இந்தப் போட்டி இந்தியாவினால் நடத்தப்பட இருந்தது.
தற்பொழுது இந்தியாவானது 2022 ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையை நடத்த உள்ளது.
மேலும் FIFA (International Federation of Association Football) அமைப்பானது 2021 ஆம் ஆண்டின் 20 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பையையும் ரத்து செய்துள்ளது.
இது கோஸ்டா ரிக்காவில் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்தது.
தற்பொழுது 2022 ஆம் ஆண்டில் FIFA-ன் 20 வயதுக்குட்பட்டோர் மகளிர் உலகக் கோப்பையை நடத்த கோஸ்டா ரிக்காவிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.