TNPSC Thervupettagam

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்கும் திட்டம்

December 4 , 2023 230 days 143 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளுடன் உரை நிகழ்த்திய போது ‘நமோ ட்ரோன் திதி’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • வேளாண்மை நோக்கங்களுக்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்கச் செய்வதற்காக 2024-25 முதல் 2025-2026 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் 15,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு (SHGs) ஆளில்லா விமானங்களை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆளில்லா விமானங்கள் மற்றும் அதன் துணைக் கருவிகள்/ அதன் துணை உபகரண கட்டணங்களுக்கான அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரையான செலவில் 80% நிதி மத்திய அரசின் நிதி உதவி மூலம் வழங்கப்படுகிறது.
  • இத்திட்டம் ஆனது மகளிர் சுய உதவிக் குழுக்களை (SHGs) மேம்படுத்தவும், வேளாண் துறையில் ஆளில்லா விமானச் சேவைகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும் முயல்கிறது.
  • மானிய விலையில் மருந்துகளை விற்கும் ஜன் ஔஷதி கேந்திராக்களின் எண்ணிக்கையை 10,000லிருந்து 25,000 ஆக உயர்த்தும் முன்னெடுப்பினையும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் தியோகர், எய்ம்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 10,000வது ஜன் ஔஷதி கேந்திராவைப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்