தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2023 ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருதினை கமலம் சின்னசாமிக்கு வழங்கினார்.
இவர் ஊட்டியைச் சேர்ந்த 90 வயது எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார்.
இவர் பல கவிதைகளையும், சுமார் 43 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
2022-23 ஆம் ஆண்டிற்கான பெண் குழந்தைகளுக்கான அதிகாரமளித்தல் விருதானது, 11 ஆம் வகுப்பு மாணவியான இளந்திரை என்பவருக்கு வழங்கப்பட்டது.
அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள மின் தூக்கிகளைப் பழுது பார்க்கும் போது ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையிலான ஒரு புதிய கருவியை இவர் கண்டு பிடித்து உள்ளார்.
மேலும் 2023 ஆம் ஆண்டில் மாவட்டத்தின் குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்தச் செய்ததற்காக திருவள்ளூர் ஆட்சியாளர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு முதல் பரிசினையும் முதல்வர் அவர்கள் வழங்கினார்.
நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை அவர் வழங்கினார்.