TNPSC Thervupettagam

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் CRISP-M தொழில்நுட்பப் பயன்பாடு

November 23 , 2021 1007 days 478 0
  • ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 75% கிராமப் பஞ்சாயத்துகளுக்கான புவியியல் தகவல் அமைப்பு (GIS - Geographical Information System) திட்டங்களை நிறைவு செய்ததன் மூலம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இந்தத் தொழில்நுட்பத்தினை ஊரக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் பிரிட்டிஷ் அரசு ஆகியவை இணைந்து உருவாக்கின.
  • CRISP-M ஆனது பல்வேறு புவி இயற்பியல் அளவுருக்களின் அடிப்படையில், மாறி வரும் பருவநிலையின் தாக்கத்தை உள்ளூர் மக்கள் புரிந்து கொள்வதற்கு உதவும்.
  • பருவநிலை நெகிழ்திறன் தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் (CRISP-M) தொழில் நுட்பமானது இந்தப் புவியியல் தகவல் அமைப்பின்  அடிப்படையிலான திட்டமிடல் தரவுகளைப் பருவநிலைத் தரவுகளுடன் ஒருங்கிணைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்